maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் மரபணு கத்திரிக்காய்க்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

மரபணு கத்திரிக்காய்க்கு அனுமதி இல்லை: மத்திய அரசு

E-mail Print
Share/Save/Bookmark

புதுதில்லி: பல தரப்பில் இருந்தும் எதிர்ப்பு வலுத்து வரும் நிலையில், மரபணு மாற்றம் செய்யப் படும் கத்திரிக்காய்களை வணிக ரீதியாக பயிரிட அனுமதி அளிக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இது குறித்து மத்திய சுற்றுச் சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது, “மரபணு மாற்ற கத்திரிக்காயை அனுமதிப்பது குறித்து, துறை விஞ்ஞானிகளிடம் ஒரு தீர்க்கமான கருத்து இல்லை. இது குறித்து மேலும் ஆய்வு செய்ய வேண்டியது அவசியம். பலதரப் பட்ட மக்கள் எதிர்க்கும் மரபணு மாற்ற கத்திரிக்காயை, அவசரக் கோலத்தில் விற்பனைக்கு கொண்டு வர வேண்டிய அவசியல் இல்லை. மிக கவனத்துடன் தீர்க்கமான முடிவு எடுக்க வேண்டியது என் கடமை.

மரபணு மாற்றம் செய்யப் பட்டக் கத்திரிக்காயால் மனிதனின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளையுமா என்று அரசு சாரா குழுவால் ஆராய்ச்சி செய்த பின்பே, இவ்விவகாரத்தில் இறுதி முடிவு எடுக்க முடியும்.” இவ்வாறு ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்தார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 227 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits