கோவை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியதில் எந்த தவறும் இல்லை என்று பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
பாமக நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க அன்புமணி நேற்று (பிப்.2) கோவை வந்திருந்தார். அப்போது நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
'கடந்த 7 மாதங்களாக எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த் சிறப்பான முறையில் செயல்படவில்லை. சட்டப்பேரவைக்கு வெளியிலும் எந்த ஒரு மக்கள் நல பிரச்னையிலும் அவர் ஈடுபடவில்லை. தேமுதிகவுக்கு என்று ஒரு கொள்கையோ, கோட்பாடோ இல்லை. சட்டப் பேரவையில் விஜயகாந்த் குறித்து ஜெயலலிதா பேசியது சரிதான்.
தேமுதிகவும் திராவிட கட்சிதான். அந்த கட்சியுடனும் கூட்டணி அமைக்க மாட்டோம். சங்கரன்கோவில் இடைத்தேர்தலில் போட்டியிடுவது குறித்து கட்சி ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்.
தமிழகத்தின் கடன் தற்போது ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 500 கோடியாக உயர்ந்துள்ளது. இதில் 70 சதவீதம் இலவசங்களுக்காக செலவிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் இலவசமாகக் கொடுக்க வேண்டியது கல்வி, சுகாதாரம் மற்றும் வேளாண்மைப் பொருள்கள். ஆனால் 45 ஆண்டுகளாக தமிழகத்தை ஆண்டு கொண்டிருக்கும் திராவிடக் கட்சிகள் தமிழகத்தில் சாராயம், சினிமா, இலவசப் பொருள்கள் ஆகியவற்றைத்தான் கொண்டு வந்துள்ளனர்.'
இவ்வாறு அன்புமணி ராமதாஸ் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



