இஸ்லமாபாத்: இந்தியாவுடன் இணைந்து தீவிரவாதத்தை ஒழிக்க பாக்கிஸ்தான் தயாராக உள்ளதாக அந்நாட்டு அயலுறவுத் துறை அமைச்சர் ஷா முகமூத் குரெஷி தெரிவித்துள்ளார்.
இது குறித்து இந்திய செய்தி தொலைக்காட்சி ஒன்றுக்கு குரேஷி அளித்த பேட்டியில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:
“மும்பை தாக்குதலுக்கு பின்னணியில் இருக்கும் தீவிரவாதிகளை முழு ஆற்றலுடன் ஒழித்துக் கட்ட பாக்கிஸ்தான் தயாராக உள்ளது. இதற்கு இந்தியாவும் ஒத்துழைக்க வேண்டும்.
பாக்கிஸ்தானே தீவிரவாதத்தால் பாதிக்கப் பட்டுள்ளது. நம் பொது எதிரியான தீவிரவாதத்தை இணைந்து ஒழிக்க வேண்டும்.
மும்பை தாக்குதல் சம்பவம் பிறகு பாக்கிஸ்தானுடனான அமைதி பேச்சு வார்த்தையை இந்தியா நிறுத்தி விட்டது. இது தீவிரவாதிகளுக்குதான் நன்மையாக அமைந்தது.
ஜூலை 15ம் தேதி நடக்கவிருக்கும் இந்தியா-பாக் வெளியுறவு அமைச்சர்கள் மாநாடு நன்மையில் முடியும். ஒரு நல்ல தொடக்கத்தை நாம் செய்ய வேண்டும்.”
இவ்வாறு பாக்கிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா முகமூத் குரேஷி கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




