புதுடெல்லி: காஷ்மீரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட லே பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங் நிவாரணப் பணிகளுக்கு ரூ. 125 கோடி ஒதுக்குவதாக அறிவித்துள்ளார்.
காஷ்மீர் லே பகுதியில் கடந்த வாரம் கனமழைப் பெய்தது. அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு அதில் 200 பேர் இறந்தனர். இறந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 1 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணத் தொகையளிக்க ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் லே பகுதியை இன்று (17/08/2010) நேரில் பார்வையிட்ட பிரதமர் மன்மோகன் சிங் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் விரைவில் ஏற்படுத்தி தர தேசிய நிவாரண நிதியில் இருந்து ரூ.125 கோடி ஒதுக்கப்படும் என அறிவித்தார். மேலும் வெள்ளத்தால் சேதமடைந்த மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள் மற்றும் மின்சார இணைப்புகள் மீண்டும் ஏற்படுத்தப்பட்டு வீடு இழந்தவர்களுக்கு இரண்டரை மாதக் காலத்தில் வீடுக் கட்டிக்கொடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



