maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் 6 மாநில முதல்வர்கள் இன்று (14/07/2010) பிரதமருடன் சந்திப்பு.

6 மாநில முதல்வர்கள் இன்று (14/07/2010) பிரதமருடன் சந்திப்பு.

E-mail Print
Share/Save/Bookmark

manmohan singhபுதுடெல்லி: நக்சல் பிரச்சினைக் குறித்து விவாதிக்க இன்று(14/07/2010) 6 மாநில முதல்வர்கள் பிரதமருடன் ஆலோசனை நடத்துகின்றனர். ஒரிசா, ச‌ட்டீஸ்கர், மேற்கு வங்கம், மகாராஷ்டிரம், ஆந்திரப் பிரதேசம், ‌பீகார் ஆகிய மாநிலங்களில் நக்சல் பிரச்சினை மிகத் தீவிரமாக உள்ளது. இதுக் குறித்து ஆலோசிக்க அந்த மாநில முதல்வர்கள் டெல்லியில் இன்று (14/07/2010) பிரதமரை சந்திக்கின்றனர். ஜார்கண்ட் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி நடப்பதால் அம்மாநில ஆளுனர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக் கொள்கிறார். நக்சல்களை ஒடுக்குவது மட்டுமின்றி மத்திய அரசு செயல்படுத்தி வரும் நலதிட்டங்கள் மக்களை எந்தளவிற்கு சென்றடைந்துள்ளது என்பது குறித்து பிரதமர் அம்மாநில முதல்மைச்சர்களுடன் விவாதிப்பார். மேலும் நக்சல்களுடன் நடக்கும் போராட்டத்தில் பாதுகாப்பு படைவீரர்கள் பெருமளவு பலியாகி வருகின்றனர். இதற்கு அவர்களுக்கு தேவையான பயிற்சிகள் இல்லாமல் இருப்பதேக் காரணம். அதனால் நக்சல்களை எதிர்க்கொள்ள பாதுகாப்பு படைவீரர்களுக்கு போதிய பயிற்சியளிப்பதுக் குறித்தும் விவாதிக்கப்படும்.

இப்பொழுது நக்சல்கள் அதிநவீன ஆயுதங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த ஆயுதங்களை அவர்களுக்கு சீனாவும் நேபாளமும் வழங்கி வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளன. இதுக் குறித்தும் பிரதமர் இந்தக் கூட்டத்தில் விவாதிப்பார்.

இந்த கூட்டத்தில் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரமும் கலந்துக் கொண்டு 6 மாநில முதல்வர்களுடன் கலந்தாலோசிப்பார்.






Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

07 March 2012, 19.01 செய்திகள்
பிரதமரை மாற்றும் எண்ணம் இல்லை : சோனியா திட்டவட்டம்
புதுதில்லி: 5 மாநில சட்டமன்ற தேர்தலில் பின்னடைவை சந்தித்துள்ள...மேலும்...
0 Comments , 133 Hits
24 March 2012, 17.58 தலைப்புச் செய்திகள்
பிரதமர் மன்மோகன் சிங் தென்கொரியா பயணம்
புதுதில்லி: அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர்...மேலும்...
0 Comments , 108 Hits
29 December 2011, 18.21 செய்திகள்
தேசிய மாமனிதர் அந்தஸ்து லாலுவுக்கு வழங்கப் பட வேண்டும்: பாஜக கோரிக்கை
புதுதில்லி: தேசிய பறவை என மயில் அறிவிக்கப் பட்டிருப்பதை போல, தேசிய...மேலும்...
0 Comments , 161 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits