புதுதில்லி: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க பிரதமர் மன்மோகன் சிங், ஒரு நாள் பயணமாக நாளை (செப்.1) திருப்பதி செல்கிறார்.
இந்திய வான் படை சிறப்பு விமானம் மூலம் காலை 10.30 மணிக்கு ரேணிகுண்டா செல்லும் பிரதமர், அங்கிருந்து மன்னாவரம் செல்கிறார்.
அங்கு தேசிய அனல்மின் நிறுவனமும், பாரத் கன மின் ரக பொருட்கள் நிறுவனத்தின் கூட்டு முயற்சியில் உருவாக்கப் படும் ரூ.6000 கோடி மதிப்புள்ள மின் பொருட்கள் தயாரிப்பு தொழிற்சாலைக்கு பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டுகிறார்.
அங்கிருந்து திருமலை செல்கிறார் மன்மோகன் சிங். மதியம் ஏழுமலையானை தரிசித்து விட்டு, ரேணிகுண்டா திரும்பும் மன்மோகன் சிங், சிறப்பு விமானம் மூலம் தில்லி திரும்புகிறார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





