maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் நாச வேலைகள் குறித்து தகவல் கொடுத்தால் ரயில்வே வேலை என மம்தா அறிவிப்பு

நாச வேலைகள் குறித்து தகவல் கொடுத்தால் ரயில்வே வேலை என மம்தா அறிவிப்பு

E-mail Print
Share/Save/Bookmark

mamta banerjeeகோல்கத்தா: நாசவேலைகள் பற்றி ரயில்வே நிர்வாகத்துக்கு தகவல் கொடுப்பவர்களுக்கு ரயில்வே வேலை கொடுக்கப் படும் என ரயில்வே துறை அமைச்சர் மம்தா பானர்ஜி தெரிவித்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் ஹவுரா ரயில் நிலையத்தில், உள்ளூர் ரயில்களை ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி தொடங்கி வைத்தார்.

அப்போது அவர் பேசியதாவது:

மேற்கு வங்க மாநிலத்தில் நாசவேலைகளை அரங்கேற்றி ரயில்வே துறையின் நற்பெயருக்கு கலங்கம் விளைவிக்க சிலர் சதி செய்கின்றனர். தனால், ரயில் தண்டவாளங்கள் துண்டிக்கப்படுகின்றன. சிக்னல்கள் முடக்கப்படுகின்றன.

இத்தகைய, நாசவேலை பற்றி யாராவது தகவல் கொடுத்தால், அவர்களுக்கு ரயில்வே துறையில் வேலை வழங்கப்படும். யாரிடம் தகவல் கொடுப்பது என்பதை ரயில்வே பொது மேலாளர்கள் சொல்வார்கள்.

அரசியல் கட்சிகள் தங்கள் நலனுக்காக ரயில்வே சொத்துகளை நாசம் செய்யக்கூடாது. பொதுமக்களும், அரசியல் கட்சிகள் சொல்வதற்காக, நாசவேலையில் ஈடுபடக் கூடாது.
நகராட்சி தேர்தல் நெருங்கிய வேளையில், ஞானேஸ்வரி ரயில் கவிழ்ப்பு நடைபெற்றது. அதுபோல், துர்கா பூஜை நெருங்கும் போது மீண்டும் நாசவேலை நடக்க வாய்ப்புள்ளது.

இவ்வாறு மம்தா பானர்ஜி பேசினார்.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Monday, 06 September 2010 11:52 )  


More and More


கிட்டதட்ட

14 March 2012, 17.42 தலைப்புச் செய்திகள்
ரயில்வே பட்ஜெட் 2012 - முக்கிய அம்சங்கள்
புதுதில்லி: 2012-13 நிதியாண்டுக்கான ரயில்வே பட்ஜெட்டை ரயில்வே அமைச்சர்...மேலும்...
0 Comments , 181 Hits
28 February 2012, 19.03 செய்திகள்
வேலைநிறுத்தம் நாட்டுக்கு நல்லதல்ல : மம்தா கருத்து
கோல்கத்தா : வேலைநிறுத்தங்கள் நாட்டுக்கு நல்லதல்ல என மேற்குவங்க...மேலும்...
0 Comments , 122 Hits
04 May 2012, 18.44 செய்திகள்
பிரதமருடன் மம்தா சந்திப்பு
புதுதில்லி: பிரதமர் மன்மோகன் சிங்கை, திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும்,...மேலும்...
0 Comments , 21 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits