maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் எந்த சட்டரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்க தயார்: இலங்கை அமைச்சர் டக்ளஸ்

எந்த சட்டரீதியான நடவடிக்கைகளையும் சந்திக்க தயார்: இலங்கை அமைச்சர் டக்ளஸ்

E-mail Print
Share/Save/Bookmark

sl minister douglasபுதுதில்லி: தனக்கு எதிராக எடுக்கப் படும் எந்த சட்டபூர்வ நடவடிக்கைகளையும் சந்திக்க தயாராக உள்ளதாக இந்தியா வந்திருக்கும் இலங்கை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

1986ம் ஆண்டு சென்னை சூளைமேட்டில் திருநாவுக்கரசு என்பவரை சுட்டுக் கொன்றவர் டக்ளஸ் தேவானந்தா. அப்போது கைது செய்யப் பட்ட டக்ளஸ், சில மாதங்களில் ஜாமீனில் வெளி வந்தார். பின்னர், 1988ம் ஆண்டு 10 வயது சிறுவனைக் கடத்தி 7 லட்சம் பணம் கேட்டு அவனது பெற்றோரை மிரட்டினார் டக்ளஸ். கீழ்பாக்கத்தில் பதிவான இந்த வழக்கில் டக்ளஸ் மீண்டும் கைது செய்யப் பட்டார். ஆனால், விரைவில் டக்ளஸ் இலங்கைக்கு தப்பி ஓடி விட்டார்.

தற்போது,தமிழர்களை கொன்று குவித்த போர் குற்றவாளியான இலங்கை அதிபர் ராஜபக்சே அமைச்சரவையில், அமைச்சராக உள்ளார் டக்ளஸ் தேவானந்தா. அது மட்டுமில்லாமல், இந்தியாவுக்கு அரசு முறை பயணமாக வருகை தந்திருக்கும் ராஜபக்சேவுடன், டக்ளஸும் வந்துள்ளார்.

இந்நிலையில், டக்ளஸை கைது செய்ய வேண்டும் என்று வழக்கறிஞர் புகழேந்தி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த தீர்ப்பின் மீதான விசாரணை நாளை (ஜூன் 11) நடைபெறுகிறது.

இதற்கிடையே, தில்லியில் செய்தியாளர்களிடம் டக்ளஸ் கூறியதாவது: “இந்தியா-இலங்கை இடையே ஏற்பட்ட ஒப்பந்தப் படி எனக்கு பொது மன்னிப்பு வழங்கப் பட்டுள்ளது. இந்தியாவுக்கு நான் சட்டப் படியே வந்துள்ளேன். என் மீது ஏதாவது சட்டப்பூர்வ நடவடிக்கை எடுக்கப் பட்டால், அவற்றை சந்திக்க தயாராக உள்ளேன்.” இவ்வாறு டக்ளஸ் கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 December 2011, 19.35 செய்திகள்
பிரதமருடன் கருணாநிதி சந்திப்பு : கனிமொழி உடனிருந்தார்
சென்னை: தமிழகம் வந்துள்ள பிரதமர் மன்மோகன் சிங்கை, திமுக தலைவர்...மேலும்...
0 Comments , 215 Hits
10 April 2012, 17.54 தலைப்புச் செய்திகள்
கூடங்குளம் : இலங்கை அரசுக்கு கருணாநிதி பதிலடி
சென்னை: கூடங்குளம் அணுமின்நிலையம் திட்டம் நேற்றைய தினம்...மேலும்...
0 Comments , 108 Hits
19 January 2012, 19.58 செய்திகள்
ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது : பிரதமர் பேச்சு
புதுதில்லி: ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 177 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits