மும்பை: பிரபல கோட்டோவியர் (கார்டூனிஸ்ட்) ஆர்.கே.லட்சுமண் (86) உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது. இவர் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
ஆர்.கே.லட்சுமணுக்கு கடந்த வியாழக்கிழமை மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக புனேவில் உள்ள சக்யாத்ரி மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டார்.அங்கு அவருக்கு மேலும் இரண்டு முறை லேசான மாரடைப்பு ஏற்பட்டது.
இதனால், அவரது உடலின் இடது பக்க உறுப்புகளின் செயல்பாடுகள் முற்றிலும் முடங்கியது. பேசும் ஆற்றலும் பாதிக்கப் பட்டது.
இந்நிலையில், விமானம் மூலம் நேற்று மாலை (ஜூன் 20) மும்பை அழைத்து வரப் பட்டார் ஆர்.கே.லட்சுமண். மும்பை பிரீச் கேண்டி மருத்துவமனையில் தற்போது அனுமதிக்கப் பட்டுள்ளார்.
நீரிழிவு நோயாளியான லட்சுமணுக்கு, சிறுநீரகமும் பாதிக்கப் பட்டுள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், ரத்த வெள்ளை அணுக்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதால், அடுத்த 48 மணி நேரத்திற்கு எதையும் சொல்ல முடியாது என மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஆர்.கே.லட்சுமண் உருவாக்கிய ‘திருவாளர் பொதுஜனம்’ என்ற கோட்டோவிய கதாபாத்திரம் மிகவும் பிரசித்தம். திருவாளர் பொதுஜனத்தின் சிலையே புனே நகரில் உள்ளது என்றால் பார்த்து கொள்ளுங்களேன். இவர் மறைந்த எழுத்தாளர் ஆர்.கே.நாராயணின் இளைய சகோதரர் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




