அகமதாபாத்: அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் பட்டேல் சர்வதேச விமான நிலையத்தில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் வாய்ப்புள்ளதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்ததையடுத்து அங்கு உச்சக்கட்ட பாதுகாப்பு போடப் பட்டுள்ளது.
இது குறித்து சர்தார் வல்லபாய் பட்டேல் விமான நிலைய அதிகாரி ஒருவர் கூறுகையில்,
“உள்துறை அமைச்சகத்திலிருந்து வந்த தீவிராவாத தாக்குதல் பற்றிய எச்சரிக்கையை அடுத்து இங்கு பாதுகாப்பு அதிகரிக்கப் பட்டுள்ளது. பயணிகளை சோதனையிடும் போது அதிக கவனமாக இருக்கும் படியும், சந்தேகம் படும் படியாக யாராவது தென் பட்டால் தகவல் அளிக்கும் படியும் சோதனை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




