புதுதில்லி: அண்மையில் ஜம்மு சென்று திரும்பிய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, செப்டம்பர் மாதம் காஷ்மீர் செல்லவுள்ளதாக தெரிகிறது. ஆனால், பயண தேதி இன்னும் இறுதி செய்ய படவில்லை என காங்கிரஸ் கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடந்த மாதம் இறுதியில் ஜம்முவுக்கு ஒரு நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். அப்போது, அவர் காஷ்மீர் செல்லவில்லை.
இந்நிலையில், ஜம்மு காஷ்மீர் காங்கிரஸ் தலைவர் சைஃபுதீன் சோஸ், 3 தினங்களுக்கு முன் சோனியா காந்தியை சந்தித்தார். அப்போது, சோனியா காந்தி காஷ்மீருக்கு வர வேண்டும் என அவர் அழைப்பு விடுத்ததாக தெரிகிறது.
இது குறித்து சோஸ் கூறுகையில், “சோனியா அவர்களை காஷ்மீர் வருமாறு அழைத்தேன். அதற்கு சோனியா காந்தி சம்மதம் தெரிவித்தார். சோனியாவின் ஜம்மு பயணம் வெற்றி பெற்றது.” என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|



