சென்னை: பென்னாகரம் இடைத்தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் இன்பசேகரனை ஆதரித்து துணை முதல்வர் ஸ்டாலின் வரும் 23ஆம் தேதி முதல் 25 ஆம் தேதி வரை பிரசாரம் செய்கிறார். பென்னாகரம் இடைத்தேர்தலுக்கு இன்னும் 22 நாட்களே உள்ள நிலையில் அனைத்துக் கட்சியினரும் அங்கு பிரச்சாரம் செய்வதில் மும்முரமாக இருக்கின்றனர்.
கட்சித் தொண்டர்கள் ஊர் ஊராக சென்று பிரச்சாரம் செய்கிறார்கள். இன்று(05/03/2010) நடைப்பெற இருக்கும் பொதுக்கூட்டத்தில் துரைமுருகன், வீரபாண்டி ஆறுமுகம், ஆகியோர் கலந்துக் கொள்கின்றனர்.
அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா, தேமுதிக தலைவர் விஜயகாந்த் ஆகியோரும் பிரச்சாரம் செய்ய திட்டமிட்டுள்ளனர். இதைப் பற்றிய அறிவிப்பு பின்னர் வெளிவரும்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




