பிரதாப்கர் (உபி) உத்திரபிரதேசத்தில் ஒரு ஆசிரமத்தில் ஏற்பட்ட திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி 68 பேர் பலியாகியுள்ளனர்.
உத்திரபிரதேசத்தில் இருக்கும் கிருபாளு மகராஜ் ஆசிரமத்தில், இன்று (மார்ச் 4) காலை, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப் பட்டது. அப்போது ஆசிரமத்தில் வாயில்கதவு எதிர்பாரா விதமாக கீழே விழுந்தது. இதனால் பக்தர்களிடையே கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இதில் 65 பக்தர்கள் பலியாகினர்.
125 பேர் படுகாயம் அடைந்துள்ளனர்.
சம்பவம் நடந்த போது 10,000 பேர் கூடியிருந்ததாக தெரிகிறது.
படுகாயம் அடைந்தவர்கள் பிரதாப்கர் மற்றும் அலகாபாத் மருத்துவமனைகளில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




