maniyosai.com

You are here: Home செய்திகள் தலைப்புச் செய்திகள் கடைகளை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

கடைகளை மூட வற்புறுத்தினால் கடும் நடவடிக்கை: காவல் துறை எச்சரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

chennai policeசென்னை: ஜூலை 5ம் தேதி நடக்கும் பொது வேலை நிறுத்தத்தின் போது கடைகளை மூட வற்புறுத்துபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப் படும் என சென்னை மாநநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன் எச்சரித்துள்ளார்.

இது குறித்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:

ஜூலை 5ம் தேதி நடக்கும் வேலை நிறுத்தத்தின் போது காவல் துறை மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து காவல் துறை உயரதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியுள்ளேன். அன்றைய தினம் காலையில் பஸ் டிப்போக்களிலிருந்து பஸ்களை எடுக்கும்போது ஏதேனும் பிரச்சனைகள் ஏற்படக் கூடும். இதை எதிர்கொள்ளும் வகையில் பஸ் டிப்போக்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்படும்.பஸ்கள் இயக்கப்படுவதை யாராவது தடுக்க முயன்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

பொது வேலை நிறுத்தத்தின் போது கடைகள், வர்த்தக நிறுவனங்களை மூடச் சொல்லி யாராவது நிர்ப்பந்தப்படுத்தினாலோ அல்லது வன்முறைகளில் ஈடுபட்டாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு ராஜேந்திரன் கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

25 January 2012, 12.50 பொது கட்டுரைகள்
யார் இந்த மக்கள் நலப் பணியாளர்கள்?
இரண்டு மாதங்களாக தினமும் செய்திகளில் மக்கள் நலப் பணியாளர்கள் என...மேலும்...
0 Comments , 303 Hits
10 April 2012, 18.39 செய்திகள்
மார்க்ஸிஸ்ட் முன்னாள் மாநில செயலர் வரதராஜன் காலமானார்
சென்னை: மார்க்சிஸ்ட் கட்சியின் முன்னாள் மாநில செயலர் என்.வரதராஜன் (84)...மேலும்...
0 Comments , 105 Hits
30 December 2011, 18.11 செய்திகள்
சசிகலா நீக்கப் பட்டதற்கு பாராட்டு: அதிமுக செயற்குழு தீர்மானம்
சென்னை: கட்சியின் நலனுக்காக அதிமுகவில் இருந்து சசிகலா நீக்கப்...மேலும்...
0 Comments , 157 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 463 Hits