லாகூர்: பாக்கிஸ்தானின் லாகூர் நகரில் நேற்றிரவு (ஜூலை 1) அடுத்தடுத்து நடந்த 3 தற்கொலை படை தாக்குதலில் 45 பேர் பலியாகியுள்ளனர், 175 பேர் படுகாயம் அடைந்தனர் ஆகியுள்ளனர்.
லாகூர் நகரில் அமைந்திருக்கும் பிரபலமான சுஃபி வழிப்பாடு தலத்தில் நேற்றிரவு 3 தீவிரவாத தாக்குதல்கள் நடந்தன. வழிப்பாட்டு தலத்தின் வாயிலில் முதல் தற்கொலை படை தாக்குதல் நடந்தது.
இரண்டாவது தாக்குதல் அதன் அடித்தளத்தில் நடந்தது. மூன்றாவது தாக்குதல், வழிப்பாட்டு தலத்தின், சந்தை பகுதிக்கு ஒட்டிய பகுதியில் நடந்தது.
இந்த தாக்குதலில் 45 பேர் கொல்லப் பட்டனர். 175 பேர் படுகாயம் அடைந்தனர்.
கொல்லப் பட்டவர்களில் ஏராளமான பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




