புதுடெல்லி: தனித் தெலுங்கானாக் கோரி எம்.எல்.ஏ பதவியை ராஜினாம செய்யும் தங்களின் முடிவை ஏற்கவேண்டும் என வலியுறுத்தி தெலுங்கானா எம்.எல்.ஏக்கள் உச்சநீதிமன்றாத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டது.
ஹைதராபாத் உள்ளிட்ட தெலுங்கானாப் பகுதியை ஆந்திராவிலிருந்து தனி மாநிலமாகப் பிரித்துக் கொடுக்கவேண்டும் என்ற போராட்டம் ஆந்திர மாநிலத்தில் தீவிரமாக நடந்து வருகிறது.
இந்நிலையில் தங்களது ராஜினாமாவை ஆந்திர சட்டப்பேரவைத் தலைவர் ஏற்கவேண்டும் என்று கோரி தெலுங்கானாப் பகுதியை சேர்ந்த 139 எம்.எல்.ஏக்கள் சார்பாக முன்னாள் எம்.பி. நாராயண ரெட்டி உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு இன்று(01/02/2010) நீதிபதிகள் பாலகிருஷ்ணன், நீதிபதி பஞ்சால், தீபக் வர்மா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இதனை விசாரித்த நீதிபதிகள் நாராயண ரெட்டி இப்பொழுது எம்.எல்.ஏவும் இல்லை எம்.பி யும் இல்லை. எந்த அடிப்படையில் இதை பொதுநல வழக்கு என்று கூறித் தாக்கல் செய்திருக்கிறார் என்று தெரியவில்லை. இதுப் போன்ற வேலைகளில் ஈடுபட அவருக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று கூறிய நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|





