பால் தாக்கரேப் பேசியுள்ள விதம் சரியில்லை. :( தான் அராஜகம் செய்துக்கொண்டு இருக்கும் போது அதை யாரேனும் தட்டிக் கேட்டால் பதிலுக்கு ’நீ ரொம்ப ஒழுங்கா...’ என்று தேவையில்லாத விஷயத்தையெல்லாம் பேசி வம்பிக்கிழுக்கும் லோக்கல் ரவுடிப் போலப் பேசுகிறார்.

இந்து முறையிலேயே ஒரு பெண் திருமணத்திற்கு பின் கணவன் எந்த மதமோ அந்த மதத்தை சார்ந்தவள் ஆகிவிடுகிறாள். குழந்தைகளும் தந்தையின் மரபில்தான் வருகின்றனர். சோனியாவிற்கு தாய் வீடு இத்தாலியாக இருந்தாலும் அவர் இந்திய மருமகள். ராகுலின் தந்தை ராஜீவ் இந்தியர்தானே? பெருமைமிக்க நேரு குடும்பத்தை சேர்ந்தவர்தானே?

இதுப் போல தேவையில்லாத சமயத்தில் அநாவசியமாகப் பேசி பிரச்சினையை திசைத் திருப்பப் பார்க்கிறார். இதுப் போன்ற பேச்சு அவரது மதிப்பைக் குறைத்து அவரது எதிராளிகளுக்கு மேலும் வலு சேர்க்கிறது.