புதுடெல்லி: 2010-2011ம் ஆண்டுக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று (26/02/2010) தாக்கல் செய்தார். அதில் மக்கள் நலதிட்டங்கள் நிறைந்து இருப்பதால் இந்த பட்ஜெட் மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்த பட்ஜெட்டில் கிராமபுற மேம்பாட்டிற்கும் வேளாண் துறைக்கும் மிகுந்த முக்கியத்துவம் அளித்திருப்பதாக நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி தெரிவித்தார்.
வேளாண் துறையில் உரிய நேரத்தில் கடனைத் திருப்பி செலுத்தினால் 2 சதவீத வட்டி சலுகை, கிராமப்புறங்களில் உணவு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் மற்றும் அடிப்படை கட்டமைப்புகள் அதிகரிக்கப்படும். 2000 பேர் மக்கள் வசிக்கும் இடங்களில் ஒரு வங்கி என 2012க்குள் புதிய வங்கிகள் அமைக்கப்படும் என்பது போன்ற பல அம்சங்கள் கிராமபுற மேம்பாட்டிற்கும் வேளாண் துறைக்கும் சாதகமாக உள்ளது.
பட்ஜெட்டில் உயர்த்தப்பட்ட வரிகள் மற்றும் மறைமுக வரிகள் மூலம் நாட்டிற்கு ரூ.46 ஆயிரத்து 500 கோடி வருவாய் இருப்பதாக பிரணாப் தெரிவித்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




