புதுதில்லி: கிர்கிஸ்தான் நாட்டில் ஏற்பட்டிருக்கும் இனக் கலவரத்தில் 90க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் சிக்கிக் கொண்டுள்ளது தெரிய வந்துள்ளது.
மத்திய ஆசிய நாடான கிர்கிஸ்தானில், பெரும்பான்மையான கிர்கிஸ் மக்களுக்கும், சிறுபான்மையினரான உஸ்பெக் மக்களுக்கும் இடையே கடந்த வியாழக் கிழமை முதல் கடும் மோதல் நடந்து வருகிறது. இதனால் ஏற்பட்டிருக்கும் கலவரத்தில் ஆயிரக் கணக்கானோர் அகதிகளாக உஸ்பெகிஸ்தான் சென்று வருகின்றனர்.
கிர்கிஸ்தானில் வெடித்துள்ள இந்தக் கலவரத்தில் 100க்கும் மேற்பட்டோர் இது வரை இறந்துள்ளனர். 90க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் கலவரத்தில் சிக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. இதனை இந்திய அரசின் வெளியுறவுத் துறை உறுதி படுத்தியுள்ளது.
கிர்கிஸ்தானில் மருத்துவ கல்லூரிகளில் படித்து வரும் இந்திய மாணவர்கள் நிலை பற்றி, அந்நாட்டு அரசிடம் தொடர்ந்து விசாரித்து வருவதாக இந்திய அரசு தெரிவித்துள்ளது.
கலவரம் ஏன் வெடித்தது:
கடந்த ஏப்ரல் மாதத்தில் ஜனாதிபதி குர்மன்பக் பகியெவ் அரசு நீக்கப் பட்டு இடைக் கால அரசு அமைக்கப் பட்டது. அந்த இடைக் கால அரசை சிறுபான்மை இன மக்களான உஸ்பெக் இன மக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இதனால் பகியெவ்வுக்கு ஆதரவு இருக்கும் ஊர்களில், உஸ்பெக் இன மக்களுக்கும், கிர்கிஸ் இன மக்களுக்கும் மோதம் ஏற்பட்டு கலவரம் ஏற்பட்டுள்ளது.
பாக்கிஸ்தான் உதவிக் கரம்:
இதற்கிடையே, கலவரத்தில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை பாக். ராணுவம், விமானப் படை மூலம் மீட்கப் போவதாக செய்தி வெளியாகியுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




