புதுதில்லி: அனைத்து கட்சியுடனும் ஆலோசனை நடத்திய பிறகே மகளிர் இடஒதுக்கீடு மசோதா, லோக்சபாவில் தாக்கல் செய்யப் படும் என பிரணாப் முகர்ஜி தெரிவித்துள்ளார்.
சில அரசியல் கட்சிகளின் கடும் எதிர்ப்பையும் மீறி, மகளிர் இடஒதுக்கீடு மசோதா, கடந்த மார்ச் 9ம் தேதி, ராஜ்ஜிய சபாவில் நிறைவேற்றப் பட்டது.
ஆனால், மகளிர் இடஒதுக்கீடு விவகாரத்தில் சமாஜ்வாதி கட்சி, ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட சில கட்சிகள் கடும் அதிருப்தியிலேயே இருந்து வருகின்றன.
இந்நிலையில், சமாஜ்வாதி கட்சி தலைவர் முலாயம் சிங் யாதவ், ராஷ்டிரிய ஜனதா தள தலைவர் லல்லு பிரசாத் யாதவ், ஐக்கிய ஜனதா தள தலைவர் சரத் யாதவ், திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உட்பட சில தலைவர்கள் இன்று (மார்ச் 11), மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியை சந்தித்து ஆலோசனை நடத்தினர்.
அப்போது, அனைத்து அரசியல் கட்சிகளுடனும் ஆலோசனை நடத்திய பிறகே மகளிர் இடஒதுக்கீடு யசோதா மக்களவையில் தாக்கல் செய்யப் படும் என அவர்களுக்கு, பிரணாப் முகர்ஜி உறுதியளித்ததாக தெரிகிறது.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




