புதுதில்லி : இந்திய அணி கிரிக்கெட் வீரர் யுவராஜ் சிங் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டு அமெரிக்காவில் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
கடந்த ஆண்டு உலக கோப்பை போட்டிகள் நடந்த போதே, யுவராஜ் சிங் கடும் இருமலால் அவதிப் பட்டு வந்தார்.
பின்னர், மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்ட போது அவர் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப் பட்டிருந்தது தெரிய வந்தது. அப்போதே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப் பட்டது. அதன் பின், புற்றுநோயால் ஆபத்தில்லை என தெரிவிக்கப் பட்டது.
இந்நிலையில், தற்போது புற்றுநோய் ஆபாதான கட்டத்தில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, அவர் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்காவில் இருந்து மார்ச் மாதம்தான் அவர் இந்தியா திரும்புவார் என தெரிகிறது.
யுவராஜ் சிங் விரைவில் பூரண குணமடைய வாழ்த்துவோம்.
Want to write for Maniyosai?
Download our android app
| < Prev | Next > |
|---|




