புதுதில்லி: தற்போது வழங்கப் பட்டிருக்கும் மகளிருக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கான உள் ஒதுக்கீடு எதுவும் வழங்கப் பட மாட்டாது என மத்திய அரசு திட்டவட்டமாக அறிவித்துள்ளது.
கடும் சிக்கலுக்கு நடுவே மகளிர் இடஒதுக்கீடு மசோதா நேற்று (மார்ச் 9) தாக்கல் செய்யப் பட்டது. இந்நிலையில், தற்போது வழங்கப் பட்டிருக்கும் 33 சதவீத இடஒதுக்கீட்டில், பிற்படுத்தப் பட்டோர் மற்றும் முஸ்லிம்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கப் பட வேண்டும் என்ற கோரிக்கையை சில அரசியல் கட்சிகள் முன் வைத்துள்ளனர்.
இந்நிலையில், உள் ஒதுக்கீடு வழங்கும் பேச்சுக்கே இடம் இல்லை என சட்ட அமைச்சர் வீரப்ப மொய்லி, செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.
அவர் கூறியதாவது, “ஜாதிவாரியான மக்கள் தொகை கணக்கெடுப்பு எடுக்கப் படாத நிலையில், ஜாதி ரீதியிலோ, மத ரீதியிலோ உள் ஒதுக்கீடு வழங்க இயலாது.” என தெரிவித்தார்.
Want to write for Maniyosai?
Download our android app




