புதுதில்லி: பயங்கரவாத நடவடிக்கைகளை நிறுத்தும் வரையிலும், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்களை சட்டம் முன் கொண்டு வரும் வரையிலும் பாக்கிஸ்தானுடன், இந்தியா பேச்சுவார்த்தை வைத்துக் கொள்ளக் கூடாது என பாஜக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து பாஜக செய்தி தொடர்பாளர் ராஜிவ் பிரதாப் ரூடி கூறியதாவது:
“பாக்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சரின் மனப் போக்கு, இந்தியாவுடன் அமைதியான உறவை பேண பாக்கிஸ்தான் விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது.
26/11 தாக்குதலில் ஈடுபட்டவர்களுக்கு பாக். கடற்படை பயிற்சி அளித்ததற்கான ஆதாரங்கள் உள்ளன. மும்பை தாக்குதலுக்கு காரணமான லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாதிகளை, பாக். உளவுத்துறை தலைவர் அகமது ஷுஜா பாஷா, அண்மையில் சிறையில் சந்தித்துள்ளார். இந்நிலையில், பாக்கிஸ்தானுடன் இந்தியா பேச்சுவார்த்தை நடத்தக் கூடாது.”
இவ்வாறு பாஜக செய்தி தொடர்பாளர் ரூடி கூறியுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app



