புதுதில்லி : நவம்பர் 9ம் தேதி, நாடாளுமன்ற கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் ஒபாமா உரையாற்றுவார் என்று தெரிகிறது.
நாடாளுமன்ற குளிர் காலக் கூட்டத் தொடர் நவம்பர் 8ம் தேதி தொடங்குகிறது. நவம்பர் 9ம் தேதி இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா உரையாற்றுவார் என்று தெரிகிறது.
ஒபாமா அமெரிக்க அதிபராக பொறுப்பேற்ற பிறகு, இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் இரண்டு முறை அமெரிக்கா சென்று விட்டார். அப்போது அமெரிக்க அதிபர் ஒபாமா இந்தியா வர வேண்டும் என மன்மோகன் சிங் அழைப்பு விடுத்திருந்தார். அவரது அழைப்பை ஏற்று நவம்பர் மாதம் இந்தியா வரவிருக்கிறார் ஒபாமா. ஒபாமா அமெரிக்க அதிபராக பதவியேற்றப் பின் இந்தியா வருவது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app




