maniyosai.com

You are here: Home செய்திகள் விநோத செய்திகள் முதலை வளர்க்கும் மேயர்!

முதலை வளர்க்கும் மேயர்!

E-mail Print
Share/Save/Bookmark

crocodileபுனாவான்: பிலிப்பைன்ஸ் நாட்டின் புனாவான் நகரத்து மேயர் எட்வின் எலோர்ட்,  தன் செல்ல முதலையை பிரிய மனமில்லாமல் தவித்து வருகிறார்.

புனாவான் நகரத்தில் கடந்த மாதம் 21 அடி முதலை ஒன்று வனத்துறையினரால் பிடிக்கப் பட்டது. இது தற்போது புனாவான் நகரிலேயே பராமரிக்கப் பட்டு வருகிறது.

லலாங் என்ற பெயர் கொண்ட இந்த முதலையை, கீசோன் நகரிலுள்ள நினோய் நீரியல் பூங்காவுக்கு மாற்ற சுற்றுச்சூழல் செயலர் ராமோன் பாஜே, நடவடிக்கை எடுத்து வருகிறார். ஆனால், அதற்கு புனாவான் மேயர் எட்வின் எலோர்ட் ஆட்சேபம் தெரிவித்துள்ளார்.

லலாங்குடன் மிகுந்த பாசம் கொண்டிருப்பதால் அதனை விட்டு பிரிய மனமில்லை என்றும் அதனை தன் மகன் போல் தான் நினைத்திருப்பதாகவும் மேயர் எட்வின் கூறியதாக உள்ளூர் பத்திரிகைகள் தெரிவித்துள்ளன.

அந்த முதலைக்காக 20 ஹெக்டேர் நிலப்பரப்பில் மாநகராட்சி சார்பில் முதலை பூங்கா அமைக்கவும் எட்வின் நடவடிக்கை எடுத்து வருகிறாராம்.

மேயரின் இந்த முதலை பாசம், வனத்துறையினரை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 January 2012, 19.35 தலைப்புச் செய்திகள்
விதிமுறைகள் மீறி கட்டப் படும் கட்டங்களுக்கு பொறியாளர்களே பொறுப்பு : மேயர் துரைசாமி
சென்னை: இனி விதிமுறைகள் மீறி கட்டப் படும் கட்டடங்களுக்கு அதனைக்...மேலும்...
0 Comments , 78 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%