maniyosai.com

You are here: Home செய்திகள் விநோத செய்திகள் மனைவி மீது சந்தேகம் - 99 வயது கணவன் விவாகரத்து கேட்டு வழக்கு

மனைவி மீது சந்தேகம் - 99 வயது கணவன் விவாகரத்து கேட்டு வழக்கு

E-mail Print
Share/Save/Bookmark

லண்டன்: 1940 காலக்கட்டத்தில் தன் மனைவிக்கு (தற்போது வயது 96) கள்ளக்காதல் இருந்ததை தற்போது அறிந்துக் கொண்ட 99 வயது கணவன் விவாகரத்து கேட்டு வழக்கு தொடர்ந்துள்ளார். இதனால் விவாகரத்து கோரி நீதிமன்ற கதவை தட்டியுள்ள மிக வயதான தம்பதிகள் என்ற உலக சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.

இத்தாலியை சேர்ந்தவர் அந்தோணியோ (வயது 99). இவரது மனைவி ரோஸிக்கு 96 வயது ஆகிறது. இவர்களுக்கு திருமணம் ஆகி 77 ஆண்டுகள் ஆகின்றன. இந்த தம்பதிக்கு 5 குழந்தைகளும், 12 பேரக் குழந்தைகளும், 1 கொள்ளுப்பேரக் குழந்தையும் உள்ளனர்.

1940களில், அந்தோணியோவுடன் திருமணம் ஆன பின்பு, ரோஸிக்கு வேறு ஒருவருடன் கள்ளக்காதல் இருந்துள்ளது. தன் கள்ளக்காதலனுக்கு ரோஸி எழுதிய கடிதங்கள் அண்மையில் அந்தோணியோவிடம் கிடைத்துள்ளது. இதனையடுத்து தனக்கு விவாகரத்து வேண்டும் என அந்தோணியோ நீதிமன்றத்தை நாடியுள்ளார்.

இதனால் விவாகரத்து கோரியுள்ள வயதான தம்பதி என்ற சாதனையை இவர்கள் படைத்துள்ளனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%