லண்டன்: ரோமானியாவை சேர்ந்த 23 வயதே ஆன இளம்பெண் தான் பாட்டி ஆகியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ரோமானியா நாட்டை சேர்ந்தவர் ரிஃப்கா ஸ்டானேசு (வயது 23).அவர் தன்னுடைய 11வது வயதில், லானெல் ஸ்டானேசு (திருமணத்தின் போது 13 வயது!) என்பவரை திருமணம் செய்து கொண்டாராம்.
அவரது 12வது வயதில் மரியா என்ற பெண் குழந்தைக்கு தாயானார் ரிஃப்கா. அதற்கு ஒரு வருடம் கழித்து, நிக்கோல் என்ற ஆண் குழந்தையை ஈன்றெடுத்துள்ளார் ரிஃப்கா.
தாயைப் போல பிள்ளை என்பது போல, ரிஃப்காவின் மகள் மரியா தனது 10வது வயதிலேயே திருமணம் செய்து கொண்டு, தற்போது குழந்தையை பெற்றெடுத்துள்ளாராம். இதனால், உலகிலேயே மிகவும் இளம் வயது பாட்டி என்ற பெருமையை (!!) பெற்றுள்ளார் ரிஃப்கா.
இந்த செய்தியை தி சன் நாளிதழ் வெளியிட்டுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app

