காபுல்: சர்வதேச பயங்கரவாதி பின் லேடன் பாக்கிஸ்தானிலேயே இருப்பதாகவும், அவனுடைய இருப்பிடம் பாக்கிஸ்தான் அரசுக்கு தெரியும் எனவும் அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
அஃகானிஸ்தானில் நடைபெறும் சர்வதேச கொடையாளிகளுக்கான மாநாட்டில் பங்கேற்க காபுல் வந்திருக்கும் ஹிலாரி கிளிண்டன் செய்தி சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
“பின் லேடன் பாக்கிஸ்தானில்தான் உள்ளான். அவனின் இருப்பிடம் பாக்கிஸ்தான் அரசுக்கு தெரியும். பின் லேடனை அமெரிக்காவிடம் ஒப்படைக்க வேண்டும்.
மும்பை தாக்குதல் பற்றி அமெரிக்க தீவிரவாதி ஹெட்லி அளித்துள்ள தகவல்களின் முழு விவரம் எனக்கு தெரியாது. ஆனால், அந்த தகவல்கள் பாக்கிஸ்தான் அரசுக்கு தெரிவிக்கப் பட்டுள்ளது.”
இவ்வாறு ஹிலாரி கிளிண்டன் தெரிவித்துள்ளார்.
பின் லேடன் இறந்து விட்டதாக பாக்கிஸ்தான் கூறி வரும் நிலையில், அமெரிக்க அரசு இவ்வாறு கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Want to write for Maniyosai?
Download our android app





