maniyosai.com

You are here: Home செய்திகள் பாக். வெள்ளம்: இந்தியாவின் நிதியுதவியை ஏற்றது பாக்கிஸ்தான்

பாக். வெள்ளம்: இந்தியாவின் நிதியுதவியை ஏற்றது பாக்கிஸ்தான்

E-mail Print
Share/Save/Bookmark

india-pakistanபுதுதில்லி: பாக்கிஸ்தானில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு இந்தியா அளித்துள்ள ரூ.25 கோடி நிவாரண நிதியை அந்நாட்டு அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

80 ஆண்டுகளிலேயே மோசமான வெள்ளம் அண்மையில் பாக்கிஸ்தானை தத்தளிக்க வைத்தது. இதில் 1700 பேர் இறந்தனர். 6,50,000 பேர் தங்கள் வீடுகளை இழந்துள்ளதாகவும், 60 லட்சம் பேருக்கு உடனடி நிவாரணம் தேவைப் படுவதாகவும் ஐநா தெரிவித்துள்ளது.
இந்நிலையில், ரூ. 25 கோடி நிவாரண நிதியை பாக்கிஸ்தானுக்கு வழங்க இந்திய அரசு முடிவு செய்தது. இதனை, கடந்த வாரம், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா, பாக்கிஸ்தான் வெளியுறவுத் துறை அமைச்சர் குரேஷியிடம் தொலைபேசியில் தெரிவித்தார். ஆனால், இந்தியாவின் நிதியுதவியை ஏற்றுக் கொள்ள பாக்கிஸ்தான் மறுத்து வந்தது.

இந்நிலையில், இந்தியாவின் நிவாரண நிதியை ஏற்றுக் கொள்வதாக பாக்கிஸ்தான் அரசு இன்று (ஆக.20) அறிவித்துள்ளது. பாக்கிஸ்தான் வெள்ளத்தை பற்றி விவாதிக்க கூடியிருக்கும் ஐநா சபையின் அவசரக் கூட்டத்தில் பங்கேற்க நியூயார்க் சென்றிருக்கும் பாக். அயலுறவுத் துறை அமைச்சர் குரேஷி இதனைத் தெரிவித்தார். அப்போது, இந்திய அரசின் உதவியை பாக்கிஸ்தான் பெரிதும் வரவேற்பதாக குரேஷி கூறினார்.

இந்தியாவின் நிவாரண உதவியை பாக்கிஸ்தான் ஏற்றுக் கொண்டதற்கு இந்தியா மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

08 May 2012, 18.03 தலைப்புச் செய்திகள்
ஹஜ் பயணத்திற்கு மானியம் : மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்
புதுதில்லி: சிறுபான்மையினர் வாக்கு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய...மேலும்...
0 Comments , 81 Hits
24 March 2012, 17.58 தலைப்புச் செய்திகள்
பிரதமர் மன்மோகன் சிங் தென்கொரியா பயணம்
புதுதில்லி: அணுசக்தி பாதுகாப்பு மாநாட்டில் பங்கேற்க பிரதமர்...மேலும்...
0 Comments , 108 Hits
12 February 2012, 18.32 செய்திகள்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா த்ரில் வெற்றி
அடிலைட்: அடிலைட் நகரில் நடைப்பெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒரு...மேலும்...
0 Comments , 229 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits