maniyosai.com

You are here: Home செய்திகள் குழந்தைகள் பயப்படும் இடமாக பள்ளியை மாற்ற வேண்டாம்: ஆசிரியர்களுக்கு பிரதமர் அறிவுரை

குழந்தைகள் பயப்படும் இடமாக பள்ளியை மாற்ற வேண்டாம்: ஆசிரியர்களுக்கு பிரதமர் அறிவுரை

E-mail Print
Share/Save/Bookmark

manmohan singhபுதுதில்லி: குழந்தைகள் பயப் படும் இடமாக பள்ளிக்கூடங்களை மாற்றக் கூடாது என ஆசிரியர்களுக்கு பிரதமர் மன்மோகன் சிங் அறிவுரை கூறியுள்ளார்.

முன்னாள் குடியரசு தலைவர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ம் தேதியை (நாளை) ஆசிரியர்கள் தினமாக நாடெங்கும் கொண்டாடி வருகின்றனர். இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கான விருதுகளை மத்திய அரசு வழங்குவது வழக்கம். இந்த ஆண்டு விருது பெறப் போகும் ஆசிரியர்களை பிரதமர் மன்மோகன் சிங், இன்று (செப்.4) தனது இல்லத்தில் சந்தித்தார். அப்பொது அவர்களுக்கிடையே பிரதமர் மன்மோகன் சிங் உரையாடியதாவது:

"அடிப்படை கல்வி உரிமை சட்டம், மாணவர்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தண்டிப்பதை தடை செய்துள்ளது. தண்டனை வழங்கப் படாமல் இருந்தால் மாணவர்களிடையே ஒழுக்கத்தை பேணுவது சிரமம் என்ற வாதம் ஆசிரியர்களிடையே நிலவுகிறது. குழந்தைகளுக்கு பயம் ஏற்படுத்தும் இடமாக பள்ளிக்கூடங்கள் திகழக் கூடாது. ஜாதி, மதம், பாலின வேறுபாடுகள் இன்றி அனைத்து குழந்தைகளும் பயமின்றி பள்ளிகளுக்கு செல்ல வேண்டும். இதற்கான சூழலை ஆசிரியர்களே உருவாக்க வேண்டும்." இவ்வாறு பிரதமர் மன்மோகன் சிங் கூறினார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

19 January 2012, 19.58 செய்திகள்
ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது : பிரதமர் பேச்சு
புதுதில்லி: ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 177 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits