maniyosai.com

You are here: Home செய்திகள் வரதராஜன் மரணத்திற்கு காரணம் என்ன? - காவல் துறை விளக்கம்

வரதராஜன் மரணத்திற்கு காரணம் என்ன? - காவல் துறை விளக்கம்

E-mail Print
Share/Save/Bookmark

varadarajanசென்னை: அண்மையில் தற்கொலை செய்துக் கொண்டு இறந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டபிள்யூ.ஆர்.வரதராஜனின் மரணத்தில் மர்மம் எதுவும் இல்லை என தமிழக காவல்துறை தெரிவித்துள்ளது.

 


மார்க்சிஸ்ட் கம்யூ. மூத்த தலைவரும், முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான டபிள்யூ.ஆர்.வரதராஜன் அண்மையில் கடிதம் எழுதி வைத்து விட்டு தற்கொலை செய்துக் கொண்டார். இவர் மரணத்தில் மர்மம் இருப்பதாக சில ஊடகங்கள் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தன.

இந்நிலையில், டபிள்யூ.ஆர்.வரதராஜன் மரணம் குறித்து தமிழக காவல்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில், “டபிள்யூ.ஆர்.வரதராஜன் நீரில் மூழ்கியே இறந்துள்ளார். பிரேத பரிசோதனை அறிக்கையில், உடலில் விஷம் கலந்திருப்பதற்கான அறிகுறி இல்லை என தெரிவிக்கப் பட்டுள்ளது.

அரசு மருத்துவர் நடத்திய பிரேத பரிசோதனையில் டபிள்யூ.ஆர்.வரதராஜன் நீரில் மூழ்கி இறந்திருப்பது தெரிகிறது. காவல் துறை நடத்தி வரும் விசாரணையிலும் இது உறுதி செய்யப் பட்டுள்ளது.

டபிள்யூ.ஆர்.வரதராஜன் உடலில் இருந்து பதிவு செய்யப் பட்ட கை ரேகையும், அமெரிக்க விசா பெற அவர் ஏற்கனவே பதிவு செய்திருந்த கை ரேகையும் ஒத்துப் போகிறதா என ஆய்வு செய்து வருகிறோம்.”

இவ்வாறு காவல் துறையின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

 




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Tuesday, 09 March 2010 00:23 )  


More and More


கிட்டதட்ட

03 February 2012, 12.44 தலைப்புச் செய்திகள்
விஜயகாந்த் பற்றி ஜெயலலிதா பேசியதில் தவறு இல்லை - அன்புமணி
கோவை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் பற்றி முதல்வர் ஜெயலலிதா பேசியதில்...மேலும்...
0 Comments , 199 Hits
02 January 2012, 20.07 தலைப்புச் செய்திகள்
பரபரப்புக்காக செய்திகள் எழுத வேண்டாம்: ஊடகங்களுக்கு பிரதமர் அறிவுரை
புதுதில்லி: பரபரப்புக்காக மிகைப் படுத்தப் பட்ட செய்திகளை எழுத...மேலும்...
0 Comments , 129 Hits
19 January 2012, 19.58 செய்திகள்
ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது : பிரதமர் பேச்சு
புதுதில்லி: ஊடகங்களை தணிக்கை செய்ய முடியாது என பிரதமர் மன்மோகன்...மேலும்...
0 Comments , 177 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits