maniyosai.com

You are here: Home செய்திகள் ஷாருக் கான் படத்தை புறக்கணியுங்கள்: விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

ஷாருக் கான் படத்தை புறக்கணியுங்கள்: விஷ்வ ஹிந்து பரிஷத் வலியுறுத்தல்

E-mail Print
Share/Save/Bookmark

praveen togadiaஇந்தோர்: ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளில் பாக். பங்கேற்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்த ஷாருக் கானின் படத்தை புறக்கணிக்க வேண்டும் என விஷ்வ இந்து பரிஷத் கோரிக்கை விடுத்துள்ளது. ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் பாக். வீரர்களை யாரும் விலைக்கு வாங்கவில்லை.

இது குறித்து கருத்து தெரிவித்த நடிகர் ஷாருக் கான் பாக். வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார். இதற்கு சிவசேனா கட்சி கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சிவசேனாவைத் தொடர்ந்து விஷ்வ இந்து பரிஷத் கட்சியும் ஷாருக் கானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அக்கட்சியின் சர்வதேச பொது செயலாளர் பிரவீண் தொக்காடியா கருத்து தெரிவித்துள்ளதாவது:

“மும்பை தாக்குதலில் பாக்கிஸ்தானின் பங்கை யாராலும் மறுக்க முடியாது. அப்படி பட்ட பாக்கிஸ்தானுக்கு நேரிடியாக ஆதரவு தெரிவித்திருக்கும் ஷாருக் கானின் படத்தை (மை நேம் இஸ் கான்) புறக்கணிக்க வேண்டும். ஆனால், போராட்டங்கள் அமைதியாக நடக்க வேண்டும்.

 

பாக்கிஸ்தானில் இருந்து இந்தியாவுக்கு வரும் தீவிரவாதிகளின் எண்ணிக்கை அதிகம். பாக். வீரர்களை நாட்டுக்குள் அனுமதித்தால், தீவிரவாதிகளின் வருகை மேலும் அதிகரித்து விடும்.

சினிமா நட்சத்திரங்கள் அரசியல் பற்றி பேசுவதற்கு முன் பின் விளைவுகள் பற்றி சிந்திக்க வேண்டும்.”

இவ்வாறு பிரவீண் தொக்காடியா கூறியுள்ளார்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Sunday, 07 February 2010 13:07 )  


More and More


கிட்டதட்ட

11 March 2012, 18.32 சம்பவம்
பாக்கிஸ்தானில் மனித வெடிகுண்டு தாக்குதல் : 13 பேர் பலி
இஸ்லமாபாத்: பாக்கிஸ்தான் நாட்டின் பெஷாவார் நகரில் இன்று (மார்ச் 11)...மேலும்...
0 Comments , 124 Hits
15 May 2012, 20.56 செய்திகள்
சூதாட்ட புகார் : 5 கிரிக்கெட் வீரர்கள் பணிநீக்கம்
மும்பை: கிரிக்கெட் சூதாட்டத்தில் கையும் களவுமாக பிடிப்பட்டுள்ள 5...மேலும்...
0 Comments , 16 Hits
08 April 2012, 17.36 தலைப்புச் செய்திகள்
வசதிப்படும் போது பாக்கிஸ்தான் செல்வேன் : இந்திய பிரதமர்
புதுதில்லி: வசதியான நேரத்தில் தான் பாக்கிஸ்தான் செல்லப் போவதாக...மேலும்...
0 Comments , 97 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits