மதுரை: இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களில் வேலை செய்யும் அர்ச்சகர்களுக்கு, கோயிலுக்கு வந்து போக இலவச மிதிவண்டியை வழங்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது.
இது குறித்து இந்து அறநிலையத் துறை இணை ஆணையர் சுதர்சன் நிருபர்களிடம் கூறியதாவது:
“ஒரு கால பூஜை திட்டத்தின் மூலம் கிடைக்கும் நிதியை, கிராமப் புறங்களில் இருக்கும், இந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் கோயில்களின் அர்ச்சகர்களுக்கு மிதிவண்டி வழங்க ஒதுக்கவுள்ளோம்.
அர்ச்சகர்களுக்கு நல்ல தரமான மிதிவண்டி வழங்கப் படும். “
இவ்வாறு சுதர்சன் கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app




