maniyosai.com

You are here: Home செய்திகள் கூர்க்கா தலைவரை கொலை செய்தவன் சிறையில் இருந்து தப்பியோட்டம்

கூர்க்கா தலைவரை கொலை செய்தவன் சிறையில் இருந்து தப்பியோட்டம்

E-mail Print
Share/Save/Bookmark

madan tamangடார்ஜிலிங்: அகில இந்திய கூர்க்கா கூட்டமைப்பின் தலைவர் மதன் தமாங்கின் கொலை வழக்கில் முதன்மையாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள நிகோல் தமாங் இன்று காலை (ஆக.22) சிஐடி காவலில் இருந்து தப்பி ஓடி விட்டான்.

டார்ஜிலிங்கில் கட்சி நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மேற்பார்வை செய்துக் கொண்டிருந்த போது, கடந்த மே 21ம் தேதி அகில இந்திய கூர்க்கா கூட்டமைப்பின் தலைவர் மதன் தமாங் சில சமூக விரோதிகளால் வெட்டிக் கொல்லப் பட்டார்.

இந்த வழக்கில் முதன்மையாக குற்றஞ்சாட்டப் பட்டுள்ள நிகோல் தமாங் கடந்த 16ம் தேதி காவல் துறையினரால் கைது செய்யப் பட்டான். அதனைத் தொடர்ந்து, ஆக.17ம் தேதி டார்ஜிலிங் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப் பட்ட நிகோல் தமாங், டார்ஜிலிங்கில் சிஐடி காவலில் வைக்கப் பட்டிருந்தான்.

இந்நிலையில், இன்று காலை கழிவறைக்கு செல்வதாக கூறி விட்டு, சிஐடி காவலில் இருந்து நிகோல் தமாங் தப்பிவிட்டதாக, டார்ஜிலிங் காவல் துறை எஸ்.பி. தேபேந்திர பிரதாப் சிங் தெரிவித்துள்ளார்.

தப்பி ஓடிய நிகோல் தமாங்கை காவல் துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர்.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

22 January 2012, 21.45 சம்பவம்
கோல்கத்தாவில் தீ விபத்து : 100 குடிசைகள் எரிந்து நாசம்
கோல்கத்தா : கோல்கத்தாவின் காளியாகாபூர் பகுதியில் உள்ள சேரியில்...மேலும்...
0 Comments , 90 Hits
23 February 2012, 17.39 தலைப்புச் செய்திகள்
வங்கி கொள்ளையர்கள் 5 பேர் என்கவுண்டரில் கொலை
சென்னை: அடுத்ததுத்து இரு வங்கிகளில் கொள்ளையடித்த 5 கொள்ளையர்களை...மேலும்...
0 Comments , 93 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits