சென்னை: காங்கிரஸ் பொதுச் செயலாளர் இன்று (05/02/2010)ஒரு நாள் பயணமாக புதுச்சேரி வருகிறார். புதுச்சேரியில் விளையாட்டு மைதானத்தைத் திறந்து வைப்பதற்காகவும், பாண்டிச்சேரி பல்கலைக் கழக மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்குப் பெறவும் ராகுல் காந்தி இன்று (05/02/2010) புதுச்சேரி வருகிறார்.
ராகுல் காந்தி சென்ற ஆண்டு தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டார். இப்பொழுது மீண்டும் ஒருநாள் சுற்றுப்பயணமாக புதுச்சேரிக்கு வர திட்டமிட்டிருக்கிறார். பாண்டிச்சேரி பல்கலைக்கழகம் சார்பாக ரூ.2கோடி செலவில் கிரிக்கெட் மைதானம் கட்டப்பட்டுள்ளது. அதைத் திறந்து வைக்க ராகுல் காந்தி அழைக்கப்பட்டிருக்கிறார். இந்நிகழ்ச்சியுடன் பாண்டிச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துரையாடலும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இந்த கலந்துரையாடல் நிகழ்ச்சியை தேசிய மாணவர் யூனியன் ஏற்பாடு செய்துள்ளது. ராகுல் இன்று (05/02/2010) பிற்பகல் சென்னை வந்து அங்கிருந்து புதுச்சேரி செல்கிறார்.
Want to write for Maniyosai?
Download our android app




