புதுச்சேரி: இந்தியாவில் வாழும் 99 சதவீத மக்கள் தாங்கள் இந்தியர்கள் என்று அடையாளப் படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். மீதி 1 சதவீதத்தினர் மட்டும் பிரிவினையை தூண்டுகிறார்கள் என்று ராகுல் காந்தி கூறியுள்ளார்.
ராகுல் காந்தி புதுச்சேரிக்கு இன்று (பிப்.5) மாலை வருகை தந்தார்.
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்களுடன் கலந்துறையாடிய ராகுல் காந்தி, நாட்டில் 99 சதவீத மக்கள் இந்தியர்களாக இருப்பதாகவும், 1 சதவீதத்தினர் பிரிவினையை ஏற்படுத்துவதாகவும் தெரிவித்தார்.
‘மராத்தியர்களுக்கே மும்பை' விவகாரத்தில் சிவசேனாவுக்கும், ராகுல் காந்திக்கும் கடந்த சில நாட்களாக அறிக்கை போர் நடந்து வருவது குறிப்பிடத் தக்கது.
இதற்கிடையே, ராகுல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில பா.ஜ.க வினர் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.
Want to write for Maniyosai?
Download our android app


