சென்னை: சாமியார் நித்தியானந்தா மீது தற்போது வந்துள்ள சர்ச்சையின் பின்னணி குறித்து முழுமையாக விசாரிக்க வேண்டும் என்று இந்து முன்னணி மாநில அமைப்பாளர் ராம கோபாலன் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறுகையில்,
நித்யானந்தா புகழ்பெற்றவர். அவர் மீது இது வரை எந்த புகாரும் வந்தது இல்லை. நிஜத்தை ஆராயாமல் இந்து விரோதத்தை சிலர் தூண்டுகின்றனர்.
ஒரு பிரச்சினையை பெரிதுபடுத்துவது, ஆங்காங்கே ஆட்களை ஏவி விட்டு சட்டத்தை கையில் எடுத்துக்கொண்டு வன்முறையில் ஈடுபடுவது ஆபத்தானது. எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும்.
இந்த விவகாரத்தின் பின்னணி பற்றி முழு அளவில் விசாரித்து உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் என்றார்.
நித்தியானந்தா விவகாரம் பற்றி, பாஜக தலைவர் பொன். ராதாகிருஷ்ணன் கூறுகையில், நித்யானந்தா மீதான குற்றச்சாட்டுகள் பற்றி முழுமையாக ஆய்வு செய்த பிறகே கருத்து சொல்ல முடியும்.என்றார்.
Want to write for Maniyosai?
Download our android app



