கொழும்பு: முத்தரப்பு கிரிக்கெட் போட்டியில் நேற்று (16/08/2010) இந்தியா வெற்றிப்பெற்றிருந்தாலும் வீரேந்திர சேவாக்கை சதம் அடிக்காமல் தடுக்கும் விதமாக நோ பால் வீசிய இலங்கை கிரிக்கெட் அணி வீரர் சூரஜ் ரந்தீவ் இன்று (17/08/2010) சேவாக்கிடம் மன்னிப்புக் கேட்டுள்ளார்.
இலங்கையில் முத்தரப்பு கிரிக்கெட் போட்டி நடந்து வருகிறது. இதில் நேற்று (16/08/2010) இலங்கை தம்பூலா என்னும் இடத்தில் இந்தியா இலங்கை போட்டி நடைப்பெற்றது. அப்பொழுது வீரேந்திர சேவாக் 99 ரன்கள் எடுத்திருந்த நிலையில் இலங்கை அணி வீரர் ரந்தீவ் வீசிய நோ பாலால் சேவாக் சதம் அடிக்க முடியாமல் போய்விட்டது. இருப்பினும் இந்தியா வெற்றிப் பெற்றது.
போட்டி முடிந்ததும் செய்தியாளர்களிடம் பேசிய ஷேவாக் ரந்தீவ் தான் சதம் அடிக்கக் கூடாது என்ற காரணத்தினால் வேண்டுமென்றே நோபால் போட்டதாக குற்றம் சாட்டினார். இதுப் போல ஏற்கெனவே சச்சின் டெண்டுல்கருக்கும் செய்ததாகவும் குறிப்பிட்டார்.
இந்நிலையில் இன்று (17/08/2010) சேவாக் தனது ட்விட்டர் பக்கத்தில் ‘ரந்தீவ் என் அறைக்கு வந்து மன்னிப்பு கேட்டார்’ என பதிந்துள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app





