மும்பை: பால் தாக்கரே என்னைத் தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கிறார். அதனால் அவர் நான் சென்று அவரை சந்திக்க விருப்பப்பட்டால் நிச்சயம் சந்திப்பேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் இன்று (06/02/2010) செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
சில தினங்களுக்கு முன்பு ஐபிஎல் கிரிக்கெட்டுப் போட்டிகளில் விளையாடக் கிரிக்கெட் வீரர்களை ஏலம் எடுக்கும்போது எந்த அணியும் பாகிஸ்தான் வீரர்களை தேர்வு செய்ய விரும்பவில்லை. ஐபிஎல் அதிகாரிகளும் கண்டுக்கொள்ளாததால் பாகிஸ்தான் வீரர்கள் இடம்பெறவில்லை. இந்நிலையில் கோல்கட்டா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான ஷாருக்கான் ‘பாகிஸ்தான் வீரர்களை தேர்ந்தெடுப்பதில் எந்த தவறும் இல்லை. இனி வரும் தொடர்களில் அவர்களும் இருந்தால் நல்லது.’ என்று கருத்துத் தெரிவித்தார்.
இந்தக் கருத்துக்கு உடன்படாத சிவசேனாவினர் ஷாருக்கானுக்கு எதிரானப் போராட்டங்களில் குதித்தனர். அவரது போஸ்டர்களைக் கிழிப்பது அவருக்கு எதிரான கோஷங்களை எழுப்புவது என்று அவருக்கு எதிராக பல வன்முறைகளில் ஈடுப்பட்டு வருகின்றனர். மேலும் ஷாருக்கான் நடித்து வெளிவர இருக்கும் ‘மை நேம் இஸ் கான்’ திரைப்படத்தை வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்றும் ஆர்பாட்டம் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் ‘மை நேம் இஸ் கான்’ திரைப்பட விளம்பரத்திற்காக லண்டன் சென்றிருந்த ஷாருக்கான் இன்று (06/02/2010) மும்பைத் திரும்பினார். அவரை செய்தியாளர்கள் விமான நிலையத்திலேயே சூழ்ந்துக் கொண்டு இதுப்பற்றி கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர் ’நான் எதையும் தவறாகக் கூறிவிடவில்லை. எல்லா இந்தியர்களின் மனதிலும் உள்ளதைத் தான் நான் கூறினேன். பால் தாக்கரே ஏதோ என்னைத் தவறாகப் புரிந்துக் கொண்டிருக்கிறார். அவர் நான் வந்து அவரை நேரில் சந்திக்க விருப்பப்பட்டால் நிச்சயம் சந்திப்பேன்.’ என்றுக் கூறினார். மேலும் ’நான் பிறந்து வளர்ந்தது எல்லாம் மும்பையில்தான். எனக்கு ஒரு நல்வாழ்வு அளித்ததும் இந்த மும்பைதான். அப்படியிருக்கையில் எப்படி நான் வேறொரு நாட்டுக்கு சொந்தமாவேன்?’ என்றும் பால் தாக்கரேவை தனக்கு வெகுக் காலமாகவேத் தெரியும் அவரை சந்தித்துப் பேசுவதில் தனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை
என்று கூறியுள்ளார்.
மும்பை விமான நிலையத்தில் ஷாருக்கானுக்கு பாதுகாப்பளிக்க 500 பாதுகாப்பு வீரர்களும் அவரது தனிப்பட்ட பாதுகாவலர்கள் 50 பேரும் அவருடன் இருந்தனர். விமான நிலையத்திலிருந்து அவரது காருக்கு முன்னும் பின்னும் 2 போலீஸ் வாகனங்கள் சூழ மிகுந்தப் பாதுகாப்புடன் 12கிமி தொலைவில் இருக்கும் அவரது வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டார்.
Want to write for Maniyosai?
Download our android app


