புதுதில்லி: ஜூன் 27ம் தேதி நடக்க வேண்டிய ரயில்வே பணியாளர் தேர்வு ஒத்தி வைக்கப் பட்டுள்ளது.
ரயில்வே துறையில் உதவி ரயில்நிலைய அதிகாரிகள் நியமனத்துக்கான தேர்வு அண்மையில் ஷோலாபூர் மற்றும் நாக்பூரில் நடந்தது. இந்த தேர்வை மும்பை ரயில்வே பணிநியமன ஆணையம் நடத்தியது. இந்தத் தேர்வில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்திருப்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.
இதனையடுத்து, வரும் 27ம் தேதி நடக்க வேண்டிய முன்பதிவு ஊழியர்களுக்கான பணியாளர் தேர்வை இந்திய ரயில்வே துறை ஒத்தி வைத்துள்ளது.
இது குறித்து இந்திய ரயில்வே வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில்,”ரயில்வே தேர்வுகள் பற்றி சிபிஐ செய்து வரும் விசாரணைக்கு ரயில்வே துறை முழு ஒத்துழைப்பு அளிக்கும். ஒத்திவைக்கப் படும் தேர்வுக்கான மாற்று தேர்வு தேதி விரைவில் அறிவிக்கப் படும்.” எனக் கூறப் பட்டுள்ளது.
இதற்கிடையே ரயில்வே பணிநியமன ஆணையத்தின் மும்பை வட்டத்தின் சேர்மேன் எஸ்.எம்.ஷர்மா தற்காலிக பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளார்.
Want to write for Maniyosai?
Download our android app




