ஐதரபாத்: காமன்வெல்த் போட்டிகள் குறித்த தனது சர்ச்சைக்குரிய கருத்துக்கு இந்திய பாட்மின்ட்டன் வீராங்கனை சாய்னா வருத்தம் தெரிவித்துள்ளார்.
விளையாட்டு வீரர்களுக்கு மத்திய அரசு வழங்கும் 'கேள் ரத்னா' விருதை பெற்றவர் சாய்னா. இவர் சர்வதேச பாட்மின்ட்டன் தர வரிசை பட்டியலில் 3ம் இடத்தில் உள்ளார். இவர் காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்க உள்ளார். காமன்வெல்த் போட்டிகளுக்கான விளம்பர தூதரும் சாய்னாவே ஆவார்.
சாய்னா இன்று காலை (செப்.4) ஐதரபாத்தில் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'காமன்வெல்த் போட்டிகளுக்கான ஏற்பாடுகள், முன்பு, மெல்பர்ன், பீஜிங் ஆகிய இடங்களில் நடந்த போட்டிகளுடன் ஒப்பிடும் போது திருப்தியளிக்கும் விதமாக இல்லை.' எனக் கூறியிருந்தார்.
சாய்னாவின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில், ஐதரபாத்தில் இன்று மாலை (செப்.4) சாய்னா நிருபர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
"நான் இந்தியாவுக்காக விளையாடும் வீராங்கனை. காமன்வெல்த் போட்டிகள் இந்தியாவில் நடப்பது எனக்கு பெருமையே. நான் காலையில் தெரிவித்த கருத்துக்கு பிறகு மிகவும் வருத்தப் படுகிறேன். என்னை நிறைய பேர் பின்பற்றுவதால் நான் அவ்வாறு பேசியிருக்க கூடாது."
இவ்வாறு சாய்னா கூறினார்.
Want to write for Maniyosai?
Download our android app




