maniyosai.com

You are here: Home செய்திகள் நில அபகரிப்பு : சசிகலா உறவினர் ராவணன் கைது

நில அபகரிப்பு : சசிகலா உறவினர் ராவணன் கைது

E-mail Print
Share/Save/Bookmark

கோவை: நில அபகரிப்பு வழக்கில் சசிகலாவின் உறவினர் ராவணன் கைது செய்யப் பட்டுள்ளார்.

முதல்வர் ஜெயலலிதாவுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் காரணமாக சசிகலாவும் அவரது உறவினர்களும் அண்மையில் அதிமுவில் இருந்து நீக்கப் பட்டார். அப்போது, சசிகலாவின் சித்தப்பா மருமகன் ராவணனும் நீக்கப் பட்டார்.
ராவணன், தனக்கு சொந்தமான ரூ.5 கோடி மதிப்புள்ள நிலத்தை அபகரித்துக் கொண்டதாக கோவையை சேர்ந்த பாஜக பிரமுகர் ராதாகிருஷ்ணன் காவல்துறையிடம் புகார் அளித்திருந்தார். அந்தப் புகாரின் பேரில் ராவணன் எந்த நேரத்திலும் கைது செய்யப் படக் கூடும் என்று எதிர்பார்க்கப் பட்டது.

இந்நிலையில், சென்னையில் தங்கியிருந்த ராவணனை கோவை சூலூர் காவல்துறையினர் நேற்று மாலை (ஜன.26) விசாரணைக்காக கைது செய்தனர். நேற்றிரவு சென்னையில் அவரிடம் காவல்துறையினர் துருவி துருவி விசாரணை நடத்தினர். பின்னர், ராவணன் சென்னையிலிருந்து கோவை அழைத்துச் செல்லப் பட்டார்.

இதற்கிடையே, நீலகிரி மாவட்ட அதிமுக முன்னாள் செயலாளர் செல்வராஜை லாரி இடித்து கொன்றதாக ராவணன் மீது அவரது உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இந்த விவகாரத்தில் ராவணன் மீது கொலை வழக்கு பதிவு செய்யப் படலாம் என்று எதிர்பார்க்கப் படுகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

20 February 2012, 12.16 தலைப்புச் செய்திகள்
நடராஜன் கைது நாடகமே : கருணாநிதி கருத்து
திருச்சி: சசிகலா கணவர் நடராஜன் கைது செய்யப் பட்டிருப்பது நாடகமே என...மேலும்...
0 Comments , 146 Hits
19 January 2012, 20.32 செய்திகள்
காமன்வெல்த் ஊழல் : கல்மாடிக்கு பிணை
புதுதில்லி: காமன்வெல்த் ஊழல் தொடர்பான வழக்கில் கைது செய்யப் பட்டு...மேலும்...
0 Comments , 103 Hits
01 January 2012, 18.43 செய்திகள்
பொற்கோயிலில் பிரதமர் வழிபாடு: கறுப்பு கொடி காண்பித்து ஹசாரே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம்
அமிர்தசரஸ்: சீக்கியர்களின் புனித தலமான அமிர்தசரஸ் பொற்கோயிலில்...மேலும்...
0 Comments , 276 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits