maniyosai.com

You are here: Home செய்திகள் கறுப்பு பெட்டி உடைய கார் விரைவில் அறிமுகம்

கறுப்பு பெட்டி உடைய கார் விரைவில் அறிமுகம்

E-mail Print
Share/Save/Bookmark

car accidentலண்டன்: விமானங்களில் இருப்பதை போன்ற கறுப்பு பெட்டி உடைய கார் விரைவில் அறிமுகம் ஆக உள்ளது.

விமானங்கள் விபத்தில் சிக்க நேரிட்டால், அதில் வைக்கப் பட்டுள்ள கறுப்பு பெட்டி மூலம் விபத்துக்கான காரணத்தை அறிந்துக் கொள்ள முடியும். விபத்தில் சேதம் அடையாத படி கறுப்பு பெட்டி வடிவமைக்கப் படுவதுதான் அதன் தனிச் சிறப்பு. இதே போன்ற கறுப்பு பெட்டியை காரில் பயன் படுத்துவது குறித்து இண்டெல் நிறுவன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர். காரில் பொறுத்தப் படும் இத்தகைய கருப்பு பெட்டி, விபத்து நேரும் சமயங்களில் அருகில் உள்ள காவல் துறை மற்றும் ஆம்புலன்ஸ் நிலையத்துக்கு தானாகவே தகவல் சொல்லி விடும். விபத்து நேரும் பட்சத்தில், கார் எவ்வளவு வேகத்தில் சென்றுக் கொண்டிருந்தது, காரின் எந்த பாகம் விபத்துக்கு காரணம் போன்ற அத்தியாவசிய தகவல்களை காவல் துறை மற்றும் காப்பீடு நிறுவனங்கள் தெரிந்துக் கொள்ள முடியும். காரின் உள்புறத்திலும், வெளிபுறத்திலும் பொறுத்தப் பட்டிருக்கும் கேமரா, கார் விபத்தை துல்லியமாக படம் பிடித்து விடும். இதை வைத்தும் விபத்துக்கான காரணங்களை சிரமமின்றி அறிந்துக் கொள்ள முடியும்.

இவை மட்டும் இல்லாமல், சாலையில் அடுத்து வரவிருக்கும் ஆபத்தை முன் கூட்டியே கணித்து ஓட்டுநருக்கு தகவல் அளிக்கும் வசதியும் செய்யப் பட்டுள்ளது. ஆபத்து தலைக்கு மேல் போகும் போது, ஓட்டுநரின் கட்டுப்பாட்டில் இருந்து மீண்டு, கார் தானாகவே சாதூர்யமாக செயல் பட ஆரம்பித்து விடும். காரின் வெளிப்புறத்தில் கேமரா இருப்பதால், தவறான பாதையில் சென்றாலோ, சிக்னலை கவனிக்காமல் சென்றாலோ, காரே எச்சரிக்கை செய்யும். அது மட்டுமில்லாமல், கார் தானாகவே சாலை ஓரத்தில் இடத்தை தேடிக் கொண்டு பத்திரமாக நின்று விடும்.

மாயாஜால கார் போல செயல் படப் போகும் இந்த தொழில்நுட்பங்களை கொண்ட காரை இண்டெல் நிறுவன ஆராய்ச்சியாளர்கள் வடிவமைத்து வருகின்றனர். இந்த பலே கார் விரைவில் சந்தைக்கு வரும் என தெரிகிறது.

இந்த செய்தியை தி டெலிகிராஃப் நாளிதழ் வெளியிட்டுள்ளது.




Want to write for Maniyosai?

Download our android app


Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

26 March 2012, 11.49 சம்பவம்
அல்ஜீரியா பேருந்து விபத்தில் 19 பேர் பலி
டியாரெட் (அல்ஜீரியா): அல்ஜீரியா நாட்டில் நேற்று அதிகாலை பேருந்து...மேலும்...
0 Comments , 77 Hits
02 April 2012, 12.51 செய்திகள்
ரஷ்யாவில் விமான விபத்து : 34  பேர்  பலி
மாஸ்கோ: ரஷ்ய நாட்டின் சைபீரியா பகுதியில் இன்று காலை (ஏப்.2) ஏற்பட்ட...மேலும்...
0 Comments , 48 Hits
04 January 2012, 19.11 சம்பவம்
தில்லியில் கட்டடம் இடிந்து 5 பேர் பலி
புதுதில்லி: மேற்கு தில்லியில் உள்ள முந்த்கா பகுதியில் இன்று (ஜன.4)...மேலும்...
0 Comments , 129 Hits

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits