திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தில் பன்றிக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த மாதத்தில் மட்டும் இது வரை 30 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மாநிலத்திலேயே அதிக பட்சமாக தலைநகர் திருவனந்தபுரத்தில் 16 பேருக்கு பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது தெரிய வந்துள்ளது. கொல்லம் நகரில் 7 பேருக்கும், கண்ணூரில் 3 பேருக்கும், ஆலப்புழை, எர்ணாகுளம், திருச்சூர் ஆகிய பகுதிகளில் தலா ஒருவருக்கும் பன்றிக் காய்ச்சல் நோய் இருப்பது கண்டறியப் பட்டுள்ளது.
எர்ணாகுளம் அரசு மருத்துவமனையில், ஜூன் 9ம் தேதி பன்றிக் காய்ச்சல் நோயால் ஒருவர் பலியானார் என்பது குறிப்பிடத் தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app





