சென்னை: நடந்து முடிந்த உலக தமிழ் செம்மொழி மாநாட்டில், ஆரம்பத்திலிருந்து தமிழிலேயேப் படித்தவருக்கு அரசு வேலையில் முன்னுரிமை அளிக்கப்படும் என்று தமிழக முதல்வர் கருணாநிதி அறிவித்தார்.
இந்த அறிவிப்பின்படி தொடக்கக் கல்வி முதல் தமிழிலேயே படித்த பேதுரு என்பவருக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அலுவலகத்தில் நகல் பெருக்கியாளர் (ஜெராக்ஸ் ஆபரேட்டர்) பணியிடத்தில் பணி நியமனம் வழங்கப்பட்டுள்ளது. இவர் சென்னை சாந்தோம் மாவட்ட தொழில் நுட்ப வேலைவாய்ப்பு அலுவலகத்தின் மூலமாகப் பரிந்துரைக்கப்பட்டார்.
இன்று (09/07/2010) முதல்வர் கருணாநிதி தமிழக அரசு பணி நியமனத்திற்கான ஆணையை வழங்கி வாழ்த்துக் கூறினார். செம்மொழி மாநாட்டில் செய்த அறிவிப்பின்படி தமிழில் படித்தவருக்கு அளிக்கப்படும் முன்னுரிமை அடிப்படையில் முதன்முதலாக பணி நியமனம் செய்யப்பட்டவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Want to write for Maniyosai?
Download our android app




