ஃபேஸ்புக் சமூக வலைதளம் எட்டாவது ஆண்டுக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. ஏறக்குறைய 85 கோடி பயனீட்டாளர்களை உடைய ஃபேஸ்புக் வலைதளம் 2004ம் ஆண்டு பிப்ரவரி 4ம் தேதி மார்க் சக்கர்பெர்க்கால் நிறுவப் பட்டது.
ஃபேஸ்புக்கை நிறுவும் போது மார்க் சக்கர்பெர்க் ஹார்வோர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்தார். முதலில் ஹார்வோர்ட் பல்கலைக்கழக மாணவர்களின் பயன்பாட்டுக்கு மட்டும் தொடங்கப் பட்ட ஃபேஸ்புக், பின்னர் பொதுமக்களுக்கு அறிமுகப் படுத்தப் பட்டது.
முதலில், thefacebook.com என்ற பெயரைக் கொண்டிருந்த சமூக வலைதளம் பிப்ரவரி 4, 2008ல் facebook.com என மாறியது.
இன்று அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள், திரைப்பட துறையினர், தொழில் நிறுவனங்கள் உள்ளிட்ட பலரும் ஃபேஸ்புக் வலைதளத்தை பயன்படுத்தி வருகின்றனர். தற்போது 85 கோடியாக இருக்கும் இதன் பயனீட்டாளர்களின் எண்ணிக்கை, விரைவில் 100 கோடியாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது.
Want to write for Maniyosai?
Download our android app





