maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் சீனாவில் ஆபாச இணைதளங்கள் மீதான தடை விலகல்?

சீனாவில் ஆபாச இணைதளங்கள் மீதான தடை விலகல்?

E-mail Print
Share/Save/Bookmark

internet in chinaபெய்ஜிங்: கடுமையான இணையதள கட்டுப்பாடுகளைக் கொண்ட சீனாவில், ஆபாச இணையதளங்கள் மீதான தடை விலகியுள்ளதாக தெரிகிறது. ஆனால், இது பற்றி சீன அரசு எந்த அதிகாரபூர்வ தகவலையும் வெளியிடவில்லை.

சீனாவில் 42 கோடி பேர் இணையதளங்களை மேயும் பழக்கம் உடையவர்கள் ஆவார்கள். இது அமெரிக்காவின் மொத்த ஜனத்தொகையை விட அதிகம். அதே சமயம், இணையதளங்களை அரசின் எதிரியாக பார்க்கும் பழக்கமும் சீன அரசுக்கு உண்டு.

சீனாவின் கம்யூனிஸ அரசை கேள்வி கேட்கும் இணையதளங்கள் சீன அரசால் வடிக்கப் பட்டு வருகின்றன.

தேடியந்திர முடிவுகளை வடிக்கட்டும் விவகாரத்தில் கூகுளுக்கும், சீன அரசுக்கும் பல மாதங்களாக குழாயடி சண்டை நடந்து வருகிறது. ஆபாச இணையதளங்கள் மீதும் சீன அரசு தடை விதித்திருந்தது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, சீனாவில் ஆபாச இணையதளங்களை மீண்டும் மேய முடிவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பற்றி சீன அரசு அதிகாரபூர்வமாக எதையும் தெரிவிக்கவில்லை. சீன அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சரிடம் இது பற்றி ஃபேக்ஸில் விளக்கம் கேட்டும் எந்த பதிலும் கிடைக்கவில்லை என ஒரு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது குறித்து பெய்ஜிங்கை சேர்ந்த இணையதள ஆய்வாளர் சாவ் ஜிங் கூறுகையில், “இதைப் போன்று (ஆபாச இணையதளங்கள் மிதான தடை விலகியது பற்றி...) சீன இணையதள வரலாற்றில் முன்பு நடந்ததில்லை.

ஒரு வேளை, ஆபாச இணையதளங்களை மக்கள் பார்க்க முடிந்தால், அரசியல் விவகாரங்களில் அனாவசியமாக தலையிட மாட்டார்கள் என அரசு நினைக்கிறதோ என்னவோ.” என்றார்.

 




Want to write for Maniyosai?

Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
:angry::0:confused::cheer:B):evil::silly::dry::lol::kiss:
:D:pinch::(:shock::X:side::):P:unsure::woohoo:
:huh::whistle:;):S
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
Last Updated ( Friday, 23 July 2010 15:56 )  


More and More


கிட்டதட்ட

சர்க்கஸில் யானைகள் சித்ரவதை : பெங்களூருவில் ஆர்ப்பாட்டம் (புகைப்படம்)
பெங்களூரு : ஜெமினி சர்க்கஸில் யானைகள் சித்ரவதை செய்யப் படுவதாக குற்றம்சாட்டி பீடா

இலவச நியூஸ்லெட்டர்

அரசின் கொள்கை முடிவுகளில் நீதிமன்றங்கள் தலையிடலாமா?

71.4%
28.6%
0%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 204 Hits