புதுதில்லி: ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தமது மொபைல் போக்குவரத்தை கண்காணிக்கும் தொழில்நுட்ப வசதிகளை பிளாக்பெரி நிறுவனம் செய்து தரா விட்டால், அந்நிறுவனத்துக்கு தடை விதிக்கப் போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது. இந்நிலையில், பிளாக்பெரி மீது எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய இன்று (ஆக.30) உள்துறை செயலாளர் தலைமையில் கூட்டம் கூடியது.
பிளாக்பெரி நிறுவனத்தின் மொபைல் போக்குவரத்தை அரசோ, வேறெந்த மூன்றாம் நபரோ கண்காணிக்க முடியாது. இந்த வசதியை தீவிரவாதிகள் தவறாக பயன் படுத்தி வருவதால், பிளாக்பெரி கைபேசிகள் மூலம் நடக்கும் மொபைல் போக்குவரத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக அரசு கண்காணிக்க அனுமதியளிக்க வேண்டும் என மத்திய அரசு கோரியிருந்தது. மற்ற நாடுகளும் இதே கோரிக்கையை முன்வைத்திருந்தன. ஆனால், இதற்கு பிளாக்பெரி நிறுவனம் மறுப்பு தெரிவித்து வந்தது.
இந்தியாவில், வரும் ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் கண்காணிப்பு தொழில்நுட்ப வசதிகளை செய்து கொடுக்காவிட்டால், பிளாக்பெரி மொபைல் சேவைகளை தடை செய்யப்போவதாக மத்திய அரசு எச்சரித்துள்ளது.
இதற்கான கெடு நாளை முடிவடையும் நிலையில், பிளாக்பெரி மீது எடுக்கப் பட வேண்டிய நடவடிக்கைகள் பற்றி ஆராய இன்று மாலை 5 மணிக்கு உள்துறை செயலாளர் தலைமையில் ஆலோசனை கூட்டம் கூடியது.
இதற்கிடையே, இந்தியாவில் சர்வர் அமைக்க பிளாக்பெர்ரி நிறுவனம் ஒப்புக் கொண்டுள்ளது. இதனால், பிளாக்பெரி மொபைல் போக்குவரத்தை மத்திய அரசு எளிதில் கண்காணிக்க முடியும். அதே போல், இந்திய அரசு கேட்கும் விபரங்களையும் பிளாக்பெரி தர சம்மதம் தெரிவித்துள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் மீண்டும் அடுத்த 60 நாட்களில் ப்ளாக்பெர்ரி செல்போன் விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தவுள்ளது.
Want to write for Maniyosai?



