maniyosai.com

You are here: Home செய்திகள் தொழில்நுட்ப செய்திகள் சூரியப் புயல் தாக்கும் அபாயம் -- நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

சூரியப் புயல் தாக்கும் அபாயம் -- நாசா விஞ்ஞானிகள் எச்சரிக்கை

E-mail Print
Share/Save/Bookmark

Sun storm 2012வாஷிங்டன்: சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள அதிர்வலைகள் ஆகிய சூரியப்புயல்கள் இன்று (ஜன-25) பூமியை தாக்கும் என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். "கடந்த ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது சூரியனின் மேல்மட்டத்தில் எழுந்துள்ள சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல், இன்று பூமியைத் தாக்கும். இதனால், செயற்கைக்கோள்கள் மற்றும் சர்வதேச விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகள் பாதிக்கப்படலாம். பூமியில் சில பகுதிகளில் கதிர்வீச்சு நேரிடலாம்' என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

சூரியனின் மேற்புறத்தில் பல்வேறு வேதியியல் மாற்றங்களால், கதிர்கள் பெருமளவில் கொந்தளித்து, அலைகளை வீசுவது, சூரிய அதிர்வலைகள் அல்லது சூரியப் புயல் எனப்படுகிறது.

புயலுக்கு முன் அமைதி என்று கூறுவார்களே அவ்வாறு கடந்த சில ஆண்டுகளாகவே சூரியனின் மேற்பரப்பு அமைதியாகவே இருந்து வருகிறது. ஆனால் கடந்த 22-ம் தேதி சூரியனின் மேற்புறத்தில் இருந்து புறப்பட்ட சூரிய அதிர்வலை ஒரு மணி நேர அவகாசத்தில் பூமிய தாக்கியது.

தற்போது, அதைவிட சக்தி வாய்ந்த சூரியஅதிர்வலை, இன்று,(ஜன-25) பூமியைத் தாக்கும் என, "நாசா' தெரிவித்துள்ளது மூன்று விதங்களில் இந்த அதிர்வலை தாக்குதல் நிகழும் வாய்ப்பு உள்ளது. முதலில் மின்காந்தத் தூண்டல் கதிர்வீச்சும், இரண்டாவதாக, புரோட்டான்கள் நிறைந்த அதிர்வலையால் கதிர்வீச்சும், மூன்றாவதாக, சூரியனின் கரோனா என்ற மேற்புறத்தில் இருந்து எழும் பிளாஸ்மா கதிர்வீச்சும் அடுத்தடுத்து பூமியை நோக்கி வரும். இந்த கதிர்வீச்சுகளினால், பூமியின் மேற்புறத்தில்
சுற்றிக் கொண்டிருக்கும் செயற்கைக்கோள்கள், சர்வதேச விண்வெளி நிலையம்,சற்று பாதிக்கப்படலாம்

பூமியின் சில பகுதிகளில் மின்சாரத் தொகுப்பு நிலையங்கள் பாதிக்கப்படலாம். எனினும், கடந்த 1989ல் நிகழ்ந்த சூரிய அதிர்வலையைப் போல் அல்லாமல், இந்த முறை சற்று குறைவாகவே இருக்கும் எனவும், அது பூமியின் வடதுருவத்தில் தான் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.




Want to write for Maniyosai?

Download our android app


Tags:
Comments (0)
Write comment
Your Contact Details:
Comment:
[b] [i] [u] [url] [quote] [code] [img]   
Security
Please input the anti-spam code that you can read in the image.
வாசகர்கள் எழுதும் கருத்துகளுக்கு மணியோசை.காம் பொறுப்பு அல்ல.தயவு செய்து ஆபாசமான, அவதூறான கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.அவ்வாறு செய்பவர்கள் கருத்து எழுதும் வசதியை இழக்க நேரிடும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
 


More and More


கிட்டதட்ட

இலவச நியூஸ்லெட்டர்

மாநிலங்களின் அதிகாரத்தை மத்திய அரசு பறிப்பதாக ஜெயலலிதா கூறுவது...

75%
25%

மருத்துவம்

வயிற்றை சுத்தப்படுத்தும் பிரஷ்
துணித் துவைக்கும்போது துணியை தண்ணீரில் ஊறவைத்து சோப்பு...மேலும்
0 Comments , 464 Hits