பனாஜி: பறக்கும் கார்களை வடிவமைத்து சோதனை ஓட்டம் நடத்தியுள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று. அது இந்தியா, பிரேசில், சீனா ஆகிய நாடுகளின் சந்தைகளை குறிவைக்கிறது.
அமெரிக்க கார் தயாரிப்பு நிறுவனமான டெர்ராஃபூஜியாவின்(Terrafugia) இணை நிறுவனமான கார்ல் டயட்ரிச் (carl Dietrich) சாலையிலும் பயணிக்கும் புதியவகை விமானம் ஒன்றினை உருவாக்கியுள்ளது. அந்நிறுவனம் அடுத்த ஆண்டு இறுதிக்குள் வணிக ரீதியாக பறக்கும் கார்களை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிவித்துள்ளது.
இவ்வகை விமானங்களுக்கு சுருட்டிக்கொள்ளக் கூடிய சிறகுகள் இருக்கும். சாலையில் ஓடும்போது அது சிறகுகளை சுருட்டி வைத்துக்கொள்ளும். அதனை மிகச் சாதாரணமாக வீட்டு கார் ஷெட்டில் கூட நிறுத்தி வைத்துக்கொள்ளலாம்.
அதன் நிறுவனர் கார்ல் டயட்ரிச் கூறுகையில் அவரது பறக்கும் காரானது தரையில் இறங்கிய 30 வினாடிப் பொழுதில் சிறகுகளை மடித்துக்கொண்டு ஓடவும் தயாராகிவிடும் என்று குறிப்பிட்டார்.
2,79,000 அமெரிக்க டாலர் விலையுள்ள பறக்கும் கார்களை சுமார் 100 பேர் முன்பதிவு செய்துவிட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
'டாங்க் ஃபுல்" செய்தால் மணிக்கு 110 மைல் வேகத்தில் 460 மைல் தூரத்தை கண்ணை மூடிக்கொண்டு கடந்துவிடலாம்!
அமெரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்டவுடன், பின்னர் பறக்கும் கார்கள் ஐரோப்பாவில் அறிமுகமாகும்" என்று கூறிய டயட்ரிச் பின்னர் அவரது கார்கள் இந்தியா, பிரேசில், சீனா சந்தைகளிலும் வட்டமிடும் என்றார்.
கோவா தின்க் ஃபெஸ்ட் (Goa Think Fest) 2011 எனப் பெயரிடப்பட்டுள்ள மாநாட்டின் மூன்று நாள் விழாவில் பங்கேற்க பனாஜி வந்துள்ள டயட்ரிச் மாஸச்சூட் இன்ஸ்டிட்யூட் ஒ டெக்னாலஜி (Massachusetts Institute of Technology - MIT) பட்டதாரி ஆவார்.
'இவ்வகை காரானது ஓரிடத்திலிருந்து ஓரிடம் செல்வதற்கு மிகவும் சுலபமான வாகனமாகும். மிகப்பெரிய நெடுஞ்சாலைகளுக்கு பதிலாக சிறிய ஓடுதளங்கள் அமைத்தால் போதுமானது" என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.
Want to write for Maniyosai?
Download our android app


